Saturday, June, 02, 2012
புதுக்கோட்டை::புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி வாக்கு சேகரிப் பில் ஈடுபடுகிறார். இந் நிலையில், தேமுதிக எம்எல்ஏக்கள் 26 பேர் களத்தில் குதித்துள்ளனர். இதனால் புதுகை இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர்உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என 20பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் அதிமுக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிகுழு பொறுப்பாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டையில் முகாமிட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர். தற்போது அதிமுகவை சேர்ந்த 10க்கும் அதிகமான எம்பிக்கள், 130 எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்களும் நேற்று புதுக்கோட்டை வந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா வரும் 9ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புதுகை வருகிறார். இதற்காக கறம்பகுடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை என்ற இடத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்து இறங்கும் முதல்வர் ஜெயலலிதா புதுப்பட்டியிலிருந்து தனது பிரசாரத்தை துவக்குகிறார். 9 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுவரை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் தேமுதிகவில் உள்ள 28 எம்எல்ஏக்களில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர மற்ற 26 எம்எல்ஏக்கள், மாநில துணை செயலாளர்கள் இளங்கோவன், ஆஸ்டின், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் நேற்றிரவு புதுக்கோட்டைக்கு வந்தனர். அவர்கள் இன்று முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்துவருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 6ம் தேதி முதல் 9 தேதி வரை தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நாளை முதல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அதிமுக, தேமுதிக கட்சிகளின் விஐபிக்களும் புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ளதால் தொகுதிமுழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. புதுகை இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது.

No comments:
Post a Comment