Friday, June 1, 2012

ரூபா 75 ஆயிரம் கொள்ளைச் சம்பவம்; 13 வயதுச் சிறுவன் கைது!

Friday, June, 01, 2012
இலங்கை::ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று சுமார் 75 ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இந்தப் பணப் பை திருடப்பட்டுள்ளதாக தமக்கு ததகவல் கிடைத்த பின்னர் விசாரணைகளை மேற்கொண்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பணத்தில் இருந்து கொள்வனவு செய்த சுமார் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment