Friday,June,01,2012
சியாட்டில்::விமானத்தில் சீட் பெல்ட் போட முடியாது என்று பிடிவாதம் பிடித்த 3 வயது சிறுவன், வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டான். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ளது சீ டேக் விமான நிலையம். இங்கிருந்து பயணிகள் விமானம் கடந்த சனிக்கிழமை புறப்பட்டது. விமானத்தில் மார்க் யான்சா என்பவரும் அவரது 3 வயது மகனும் இருந்தனர். விமானம் மேலெழும்புவதற்கு முன், எல்லோரையும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளும்படி பணிப்பெண்கள் கூறினர். ஆனால், சிறுவன் மட்டும் பெல்ட் போட முடியாது என்று அடம் பிடித்தான். எவ்வளவோ சொல்லியும் அவன் பெல்ட் போடவில்லை.
இதுகுறித்து பைலட்டுக்கு பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் விமான நிலைய கேட்டுக்கு விமானத்தை திருப்பினார். அங்கு மார்க் யான்சாவையும் சிறுவனையும் விமானத்தை விட்டு கீழே இறக்கினர். அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மார்க் கூறுகையில், ÔÔபைலட் ரொம்பவே அலட்டி கொள்கிறார்ÕÕ என்று அதிருப்தியுடன் கூறினார்.

No comments:
Post a Comment