Sunday, May 27, 2012

வெளிநாடு வாழ்; தமிழருக்கு சிங்களவர் உதவி-டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்!

Sunday, ,May, 27, 2012
இலங்கை::வகுப்புவாத தன்மையைக் கொண்டுள்ள சில சிங்களவர்கள், வகுப்புவாத கொள்கைகளைக் கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு உதவுவதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

ஹலியல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

தற்போது, வெளிநாடுகளில் உள்ள புலிகள், தனிநாடொன்றை உருவாக்கும் நோக்கில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர்களுக்கு சில சிங்களவர்களும் உதவுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புலிகள் லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களை கொலை செய்துள்ளது.

இதற்கு மேல் நான் எதனையும் கூற விரும்பவில்லை. ஏனெனில் அப்படி நான் கூறும் பட்சத்தில், ஒழுக்காற்றல் விசாரணைக்கு நான் உட்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தனது உரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment