Sunday, ,May, 27, 2012புதுடெல்லி::பிரதமர் மன்மோகன் சிங், 3 நாள் பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா, மியான்மர் இடையிலான வர்த்தகத்தை வலுபடுத்துவது, முதலீடு தொடர்புகள், நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மியான்மரின் யாங்கூன் நகருக்கு செல்லும் மன்மோகன், அந்நாட்டு அதிபர் செயினை நாளை சந்திக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகியை நாளை மறுதினம் சந்தித்து பேசுகிறார். 1987ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மியான்மர் சென்றார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மர் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் சிங் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment