Thursday, May 3, 2012

இலங்கை தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கிறதது!

Thursday,May,03,2012
புதுடில்லி::இலங்கை தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய இலங்கை சென்று திரும்பிய இந்திய பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தங்களது பயணம் குறித்து விளக்குகின்றனர்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போருக்குப்பின்னர் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு மறுவாழ்வுப்பணிகளை மேற்‌கொண்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜ. பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித்‌தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 12 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு ஆய்வு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ‌‌மேற்‌கொண்டது.

இக்குழு இலங்கையில் போரின் போது புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் பல்வேறு ஆய்வு‌களை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து தங்களது பயண விவரங்கள் அனுபவங்கள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
முன்னதாக எம்.பி.க்கள் குழுவிலிருந்து அ.தி.மு.க.வும், பின்னர் தி.மு.க.வும் தங்களது எம்.பி.க்கள் கலந்து கொள்வதை தவிர்த்தன. இக்குழுவால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தன.

No comments:

Post a Comment