Wednesday,May,02,2012
சென்னை::அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதன்மூலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று பேரவை விதி 110,ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க, கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இடை நிற்றலை தவிர்த்து அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வி கற்று, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தேன். தற்போதுள்ள கல்லூரிகளில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்வி பயிலும் வகையில் நல்லதொரு சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும்.
அதனடிப்படையில், தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 93 கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அந்த கல்லூரிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, ஏற்கனவே குறிப்பிட்ட அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த நிதியில் இருந்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைப்படும் புதிய மேசைகள், நாற்காலிகள் வழங்குதல், வகுப்பறைகளில் நவீன கரும்பலகைகள், அறிவிப்பு பலகைகள் அமைத்தல், மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேசை மற்றும் கணினி நாற்காலி வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
கல்லூரிகளில் உள்ள துறை சம்பந்தப்பட்ட நூலகங்களுக்கு தேவையான மேசை, நாற்காலிகள் வழங்குதல், புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகள் அமைத்து தருதல், நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்குதல்,
நூலகங்களை கணினிமயம் ஆக்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். மாணவ, மாணவிகள் தங்கள் பாடங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்காக கல்லூரிகளில் தரம் வாய்ந்த ஆய்வு கூடங்கள் ஏற்படுத்துதல், அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், மேசைகள், பணி மேசைகள் வழங்குதல், தண்ணீர் குழாய்கள் மற்றும் வாயு குழாய்கள் அமைத்து தருதல் ஆகிய பணிகளுடன் அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புரொஜக்டர்களும் வழங்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குதல், மாணவ, மாணவியர் விடுதிகளில் சமையலறை, உணவறை கூடங்களை மேம்படுத்துதல், கழிப்பறை வசதி செய்து கொடுத்தல், குப்பை அகற்றும் கூடைகள் வைத்தல், வகுப்பறைகள், நூலகம், ஆசிரியர் ஓய்வறைகள், உணவறை கூடங்கள் ஆகியவற்றில் மின் விளக்கு மின் விசிறி அமைத்து தருதல், தேவையான மின் உபகரணங்களை வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவுக்கு உயர் ஒதுக்கீடாக ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அனைத்து வசதிகளையும் பெற வழிவகை ஏற்படும். மேலும் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டு, அவர்கள் அகில இந்திய அளவில் முன்னிலை இடத்தை பெறும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் இன்று தேமுதிக வெளிநடப்பு!
சென்னை::சட்டசபையில் இன்று தொழில், கதர்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தின்போது பேசிய கதர்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், ‘‘எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’ என்ற பாடலைப் போன்று அவர்கள் அவைக்கு வருவது கிடையாது’’ என்றார். இதற்கு தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

No comments:
Post a Comment