Sunday, April 29, 2012
இலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்:-
தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டுமென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவய்க்கால் பகுதியில் சிறுவர் இல்லமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களை சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்களோடு விளையாட இது தருணமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் அனுபவித்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடவே மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இழைத்த அதே தவறினை மீள இழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான கணவனை இழந்த பெண்களும், அநாதைச் சிறுவர் சிறுமியரும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை மிகவும் நிதானமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்...

“நீர்டோ” அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த முல்லைத்தீவு பாரதி இல்லம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி.), முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்ணம், முல்லை. அதிபர் என். வேதநாயகம், முள்ளியவளை இராணுவ தளபதி கேணல் மதநாயக்க ஆகியோர் விழாவில் வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment