Saturday, April, 28, 2012
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். காரைநகர் பிரதேசசபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கணேசபிள்ளை பாலசந்திரன் மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலச்சந்திரன் ஊர்காவற்துறை பொலிஸில் முறைபாடு செய்துள்ளதாகவும், இவரைத் தாக்கியவர்கள் அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்தவர்கள் என அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்
அத்தோடு இவரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவர் சந்தேகத்தில் ஊர்காவற்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்
தனது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
தனது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
18 வயதான தனது மகளை கடந்த பெப்ரவரி 7, 8 ஆம் திகதிகளில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்நபரை பதுளை நீதவான் முன் நேற்று ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

No comments:
Post a Comment