Saturday, April 28, 2012

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் - டியூ.குணசேகர!

Saturday, April, 28, 2012
இலங்கை::நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ.குணேசகர தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் மற்றும் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் தொடர்பில் சில யோசனைகளை கட்சி, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் தொடர்பில் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கோரியமைக்கு பதிலளிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி இந்த யோசனைகளை முன்வைத்துள்ளது.

No comments:

Post a Comment