Saturday, April, 28, 2012
லண்டன்::ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும். அதில் மேலும் சில நாடுகளை சேர்க்க வேண்டும் என்று இந்தியா, ஜப்பான் உள்பட பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் நேற்று உரை நிகழ்த்தினார்.
இதுகுறித்து லண்டனில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐ.நா. சபையை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதற்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும். உலகின் பொருளாதாரம் உள்பட பல விஷயங்களில் பல நாடுகள் வலிமை உள்ள நாடுகளாக உருவெடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சர்வதேச வெளியுறவுத் துறை கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் விரிவுப்படுத்த வேண்டும் என்று வில்லியம் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment