Saturday, April 28, 2012

அமெரிக்க திரைப்பட விழாவில் இந்திய பெண்ணுக்கு விருது!!!

Saturday, April, 28, 2012
நியுயார்க்::அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஆண்டுதோறும் ட்ரைபேகா திரைபட விழா நடக்கிறது. இந்தாண்டு விழாவில், கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நிஷா பகுஜா உருவாக்கிய ‘தி வேர்ல்டு பிபோர் ஹெர் என்ற ஆவண படம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை படத்தில் எடுத்து காட்டியிருந்தார் நிஷா.
மொத்தம் 46 நாடுகளை சேர்ந்த 89 ஆவண படங்களில் இருந்து அவரது படம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதோடு நிஷாவுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டது. இது அவருக்கு 3வது படமாகும். வைர வியாபாரம் பற்றிய அவரது முதல் படம் ‘டயமன்ட் ரோடு, கனடாவின் ஜெமினி விருதை பெற்றது. ‘பாலிவுட் பவுண்ட் என்ற அவரது 2வது படம் உலகமெங்கும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment