Sunday, April 1, 2012

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் - பான் கீ மூன்!

Sunday, April 01, 2012
உண்மையைக் கண்டறியும் ஆணைக்கழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பான் கீ மூனின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்லாட்சி தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பான் கீ மூன் கருதுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அமைச்சர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment