Sunday, April 01, 2012
புதுடில்லி::இலங்கைக்கு விரைவில் அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு செல்ல உள்ளது. அனேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இந்தக் குழு இலங்கை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, புனரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கனவே, 500 கோடி ரூபாய் வரை, இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைக் கொண்டு, வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை பார்வையிடுவதற்காக தேசிய அளவிலான அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்ப, மத்திய அரசு தயாராகி வருகிறது. இக்குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கவுள்ளார். இக்குழு அமைக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அனேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், இக்குழு இலங்கைக்கு பயணமாகி, வீடுகட்டும் பணிகளை பார்வையிட்டு திரும்பும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment