Thursday, March 1, 2012

பேஸ்புக்'கில் காதல் மோசடி : இலங்கை பெண் கண்ணீர் : மதுரை இன்ஜினியர் கைது!

Thursday, March 01, 2012
மதுரை::இலங்கை பெண்ணுடன், "பேஸ்புக்'கில் காதலை வளர்த்து, திருமணம் செய்து ஏமாற்றி, ஆபாச படங்களை வெளியிட்ட மதுரை சாப்ட்வேர் இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர். இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் சரோஜினிதேவி,35. பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இத்தாலி நாட்டில் நிரந்தரமாக வசிக்க,"கிரீன் கார்டு' பெற்றார். ஐந்து வயது குழந்தை உள்ளது. பின், கருத்து வேறுபாட்டால், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில், சரோஜினிதேவிக்கு, "பேஸ்புக்' மூலம் மதுரை அவனியாபுரம் சிவக்குமார் அறிமுகமானார். இவர், துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தார். நட்பு காதலாக மாறியது. மகளின் பாதுகாவலராக சிவக்குமாரை நியமித்து, அவரது வங்கிக் கணக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பினார்.

டிச., 10ல், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்தனர். வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் குடியேறினர். அங்கு, சரோஜினிதேவி நடத்தை மீது சிவக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிரிய திட்டமிட்டு, ஐபேடு, ஐபோன் மற்றும் இத்தாலி, "கிரீன் கார்டை' திருடிய சிவக்குமார், "வாக்கிங்' போவதாகக் கூறிவிட்டு, மதுரை திரும்பினார்.

சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்ப வழியின்றி தவித்த சரோஜினிதேவி, சிவக்குமாரின் அப்பாவை தொடர்பு கொண்டு, பணம் பெற்று, ஊர் திரும்பினார்.

இதற்கிடையில், பெங்களூர் வேலைக்குச் சென்ற சிவக்குமார், சரோஜினிதேவி மீதான ஆத்திரத்தில், அவரது ஆபாச படங்களை "பேஸ்புக்'கில் வெளியிட்டார். இதை அறிந்து அதிர்ச்சியுற்ற சரோஜினிதேவி, போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் செய்தார். சிவக்குமாரை, மத்திய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சுமதி கைது செய்தார்.

No comments:

Post a Comment