Thursday, March 1, 2012

இலங்கைக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் தக்ஸின் ஸின்வத்ரா!

Thursday, March 01, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான தக்ஸின் ஸின்வத்ரா களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின் ஸின்வத்ரா, தற்போதைய தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஸின்வத்ராவின் சகோதரராவார்.

இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தக்ஸின் ஸின்வத்ரா மிக நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதால் இம்முறை ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்யும் இராஜதந்திர முயற்சியில் அவரின் உதவியையும் பெற அரசு தீர்மானித்தது.

இதற்கமைய தக்ஸின் ஸின்வத்ரா தொலை பேசியூடாகப் பேச்சு நடத்தியிருக்கும் இலங்கை அரசின் அதி உயர்மட்டத் தலைவர்கள் இலங்கைக்கெதிராக மேற்கொள்ளப்படும் மேற்குலகின் சதிமுயற்சியைத் தோல்வியுறச் செய்ய முழு அளவிலான ஆதரவை வழங்குமாறு கேட்டிருப்பதாக அறியமுடிந்தது.

இலங்கையின் கோரிக்கைக்கிணங்க லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் சிலருடன் அவசரப் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஸின்வத்ரா, ஜெனிவாவில் மேற்குலக நாடுகள் எடுக்கும் தீர்மானத்திற்கு ஆதரவை வழங்குவது போருக்குப் பின்னராக இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்து மென்று சுட்டிக்காடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் தக்ஸின் ஷஸின்வத்ராவின் முழுமையான ஆலோசனைகளே பின்னணியில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment