Thursday, March 01, 2012
இலங்கை::எம்பிலிபிட்டிய-கொடக்கவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நால்வருக்கு எம்பிலிபிட்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2011ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை வெட்டிக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எம்பிலிபிட்டி மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கொலை தொடர்பில் 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதும் இருவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் இருவர் நீதிமன்றை அவமதித்து மறைவாக இருந்து வருவதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதும் தண்டனை நிறைவேற்றப்படும் என எம்பிலிபிட்டி மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment