Wednesday,March,28,2012
இலங்கை::அரசிலிருந்து வெளியேற விரும்புவோர் எந்நேரமும் வெளியேறலாம். அதற்கான கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தக் கொள்கை, அமைச்சர் தொண்டமானுக்கு மட்டும் விதிவிலக்கல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொண்டமான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் எனத் தகவல்கள் கசிந்து, அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளார்.
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர் ஒருவரின் நியமனம் தொடர்பில் எழுந்த முரண்பாட்டையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது பதவியை இராஜினமா செய்தார்.
பணிப்பாளர் நியமன விவகாரத்தால் ஜனாதிபதிக்கும் அமைச்சர் தொண்டமானுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது என்றும், இதனையடுத்தே தொண் டமான் இவ்வாறானதொரு முடிவில் இறங்கியதாக கூறப்படுகின்றது. தொண்டமானின் இந்த அறிவிப்பையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் நோக் கில் சிரேஷ்ட அமைச்சர்களில் சிலர் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துரையாடும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 'பல வந்தமாக எவரையும் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்குக் கிடையாது. தொண்டமான் அரசிலிருந்து வெளியேற விரும்பினால் வெளியேறட்டும். அதில் எமக்கு எதுவித ஆட்சேபனையுமில்லை. வெளியேறுவதற்கு கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளது.
'தொண்டமான் என்னிடம் இராஜினாமாக் கடிதம் சமர்ப்பிக்கவில்லை. நான் தான் ஜனாதிபதி. அப்படியானால் அவர் வேறு எவரிடமாவது அதைச் சமர்ப்பித்திருப்பார். இதற்கு முன்னரும் பல தடவைகள் அவர் இந்தப் பல்லவியைப் பாடியுள்ளார். ஆனால், சொன்னதைச் செய்யவில்லை. எனவே, அரசிலிலிருந்து வெளியேற விரும்புவோர் தாராளமாக வெளியேறலாம்'' எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:
Post a Comment