Wednesday, March 28, 2012

ஆறுமுகம் தொண்டமான் தரப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இன்றைய தினம் சந்திப்பொன்று இடம் பெறவுள்ளது!

Wednesday,March,28,2012
இலங்கை::கால்நடைவள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தரப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இன்றைய தினம் சந்திப்பொன்று இடம் பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பெரும்பாலும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொள்ளக்கூடிய சாத்தியகூறுகள் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பதவி விலகல் அறிவிப்பு தொடர்பாக நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்திற்கும் இடையே இரண்டு சுற்று கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

No comments:

Post a Comment