Wednesday, March 28, 2012

இலங்கைக்கு எதிராக செயற்படவேண்டிய அவசியம் இருக்கவில்லை - ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பர்னாட் செவேஜ்!

Wednesday,March,28,2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக செயற்படவேண்டிய அவசியம் இருக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு ஊடகமொன்று அளித்த செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சபை எந்த தருணத்திலும் மனிதவுரிமைகள் மற்றும் மானிடவியல் நெருக்கடிகள் தொடர்பிலேயே முன்னிற்பதாக செவேஜ் குறிப்பிட்டார்.

அந்த அமைப்பின் ஆரம்பமும், குறித்த காரணங்களை அடிப்படையாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

இதனடிப்படையில், இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையும் அதேநோக்கத்துடனேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பர்னாட் செவேஜ் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கியும், மனிதவுரிமைகள் பேரவை மற்றும் இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையுடன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளில் பாதிப்புகள் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பிரித்தானியாவில் இலங்கையின் பல ஏற்றுமதி சந்தைகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment