Wednesday,March,28,2012
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு முன்னாள் உலகத் தலைவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான குறித்த குழு இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை குறித்த பிரேரணை வலியுறுத்தியிருந்தது.
இதற்கமைய குறித்த பிரேரணைக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான முன்னாள் உலகத் தலைவர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முன்னாள் உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மாரி ரொபின்சன் பி.பி.சி. செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட பிரேரணை அல்ல எனவும், நாடொன்றைத் தாழ்த்தி செயற்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment