Wednesday, March 28, 2012

அமெரிக் யோசனையில் மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் - சர்வதேச புலிகள் மகிழ்ச்சி – விமல் வீரவங்ச!

Wednesday,March,28,2012
இலங்கை::கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் ஒப்பந்தத்தை அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்றுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஒரு கிலோ நெல்லுக்கு 40 ரூபாவை வழங்க வேண்டும் என்ற போராட்டத்தை இந்த நிறுவனங்களே மக்கள் மத்திக்கு கொண்டு சென்றுள்ளன எனவும் அமைச்சர் கூறியுள்ளார். குருணாகல் இப்பாகம்முவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியே, இந்தியா மனித உரிமை பேரவையில், சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவு வழங்கியதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா கூறுவது போல், இரண்டு சமாதான விடயங்களை உள்ளடக்கியே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளில் அமெரிக்காவுக்கு எந்த தேவையுமில்லை. அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் செய்கின்றனர். குறைந்தது, இணக்கப்பாடு என்ற வார்த்தையை யோசனையில் சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச நாடுகளில் உள்ள புலிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment