Wednesday,March,28,2012
சென்னை::தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகளை கண்டறிந்து பிடிக்கும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நள்ளிரவு தொடங்கியது.
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன் இதுபோல பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
அதேபோல, தமிழகம் முழுவதும் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு தொடங்கியது. சென்னையை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நேற்று நள்ளிரவு தொடங்கியது.
டிஜிபி ராமானுஜம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், கடலோர காவல்படை ஐஜிக்கள் கிருஷ்ணமூர்த்தி, மாசானமுத்து ஆகியோரும் இந்த ஒத்திகையை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
கடலோரங்களில் தமிழக கடலோர காவல்படையுடன் சேர்த்து, மத்திய கடலோர காவல்படையும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு, கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், கொளத்தூர் வரை கடலோர காவல் படையினர் படகுகளில் கண்காணிக்கின்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதோடு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரங்களில் படகுகளில் தீவிரவாதிகள் வேடத்தில் இருக்கும் போலீசார் ஊடுருவாமல் தடுக்கவும், அவர்களை முன்கூட்டியே கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக கடலில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment