Thursday, March 29, 2012

மலேசியா இலங்கைக்கு ஆதரவு!

Thursday,March,29,2012
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு சமூகமளிக்கமாமை தொடர்பில், மலேசியா விளக்கமளித்துள்ளது.

இந்த பிரேரணையின் படி, இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், அதன் செயற்பாடுகளையும் 3 மாதங்களுக்குள் தீர்க்க முடியாது என மலேசியா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் வெளியுறத்துறை அமைச்சர் ரிச்சட் ரியோட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த 30 வருடங்களாக புலிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையினால் நேரடியாக குற்றம்சுமத்த முடியாது என தெரிவித்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வை வழங்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறான ஒரு பிரேரணைக்கு வாக்களிக்க முடியாது என்ற அடிப்படையிலேயே, மலேசியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment