Thursday, March 1, 2012

கொள்ளுப்பிட்டி ஹோட்டலொன்றில் பெண்ணின் சடலம் ; சந்தேக நபர் கைது!

Thursday, March 01, 2012
இலங்கை::கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நடத்தப்பட்ட இரசாயணப் பகுப்பாய்வு விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் குறித்த நபர் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment