Thursday, March 01, 2012
தாம்பரம்::மின்சார ரயிலில் கதவு அருகே நின்றபடி பயணம் செய்த கல்லூரி மாணவர், மின்கம்பத்தில் தலை மோதி பரிதாபமாக இறந்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராம்குமார் (18). இவர் ஊரப்பாக்கம் ஜே.சி.நகரில் தங்கியிருந்து, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல¢ செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ராம், கதவு அருகே தொங்கியபடி பயணித்தார். இரும்புலியூர் அருகே ரயில் வந்தபோது, தாம்பரத்தில் இறங்க இருந்த பயணிகள் இருக்கையில் இருந்து எழுந்து வாசல் அருகே வந்தனர். இதனால் நெரிசல் அதிகமானது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், படிக்கட்டில் தொங்கியவர்கள் இன்னும் வெளியே வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பக்கவாட்டில் இருந்த மின்கம்பம், ராமுவின் தலையை பதம் பார்த்தது. பயங்கர சத்தத்துடன் மண்டை பிளந்தது. அலறியபடி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து, தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment