Thursday, March 01, 2012
அவுஸ்திரேலியா::புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக, புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளோரில் ஒரு தொகுதி தமிழர்கள் நிதி உதவி செய்து வருவதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அட்மிரல் திஸர சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.அட்மிரல் திஸர சமரசிங்க அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் மொத்தமாக சுமார் 8 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிழமைக்கு தலா ஒரு டொலர் சேகரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
இதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவரிடமிருந்து 52 டொலர்கள் ஒரு ஆண்டுக்கு சேர்க்கப்படுகிறது. அதன்படி 8 லட்சம் பேரிடம் ஆண்டுக்கு சேர்க்கப்படுவது மிகப் பெரிய தொகை. இது புலிகளுக்கு கிடைக்கின்றமை வெளிப்படையாக தெரிகிறது.
எனினும், இப்பணத்தில் இருந்து ஒரு சதம் கூட இலங்கையில் இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு கிடைக்கப் போவது இல்லை என்பது திண்ணம் என அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment