Thursday,March,29,2012
இலங்கை::2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் நிர்மாண நடவடிக்கை களுக்காக 160 பில்லியன் ரூபாவை செலவிட்டிருக்கிறது.
பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சமரவீர, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்கு விப்பதற்காக அரசாங்கம் 15 பில்லி யன் ரூபாவை செலவிட்டிருக்கிற தென்று கூறினார்.
கிழக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 6 சதவீத பங்களிப்பை இப்போது வழங்கு கின்றது. இது வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பை விட கூடுதலாகும்.
வடமாகாணம் தேசிய பொரு ளாதாரத்திற்கு 3 சதவீத பங்களிப்பை வழங்குகின்றதென்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் பல்வேறு அமைச்சுகள் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதாக வும் அவர் கூறினார். தற்போது பல குறுகிய கால திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், நடுத்தர அளவிலான அபிவிருத்தி திட்டங்களும் இப்போது முடிவுபெறும் நிலையை எட்டியிருக்கின்றது.
மின்சார எரிசக்தி துறை அமைச்சு, நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு, நெடுஞ்சாலைகள் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியன பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இம் மாகாணங்களில் நடுத்தர அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதில் கண்ணிவெடி அகற்றுதல், மீள் குடியேற்றம், வாழ்வாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத் திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ,இராணுவம் இரண்டாயிர த்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை கண்ணி வெடி அகற்றுவதற்காக பயன்படுத்தி வருகின்றது. இவற்றிற்கு மேலதிக 6 அணிகள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அரசாங்கம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இவ்விரு மாகாணங்களில் உள்ள 250 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்துடன் வடக்கு, கிழக்கின் மின் விநியோகத் திட்டத்திற்காக அரசாங்கம் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் யாழ்குடாநாடு தேசிய மின்விநியோக வலையமைப்பில் இணைத்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் இரணைமடு நீர் விநியோகத்திட்டத்திற்கு 1064மில்லியன் ரூபாவையும், வட மாகாண கிராமிய அபிவிருத்தி திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது. இந்தத்திட்டங்கள் அனைத்துமே 2013 ம் ஆண்டில் நிறைவுபெறும் என்று பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சு தெரிவித்தது.

No comments:
Post a Comment