Tuesday, February 28, 2012

சீன இளைஞர் குழுவினர் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை நேற்று சந்தித்தனர்: இருநாட்டுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்த வேண்டுகோள்!

Tuesday, February 28, 2012
புதுடில்லி::சீன இளைஞர் குழுவினர் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை நேற்று சந்தித்தனர்.இருநாட்டுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய இளைஞர் குழு சீனா சென்றது. இதே போல சீனாவை சேர்ந்த இளைஞர் குழுவினர் 500 பேர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை அவரது மாளிகையில் நேற்று சந்தித்தனர். அவர்களிடையே ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பேசியதாவது:எங்கள் நாட்டில் கலாசார மற்றும் பாரம்பரிய பகுதிகளை சென்று பாருங்கள். இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதில் இளைஞர்களாகிய உங்கள் பங்கு முக்கியமாக உள்ளது. ஆசியாவின் கனவை நினைவாக்குவதில் சீன-இந்திய இளைஞர்கள் முக்கிய பங்காற்ற உள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் சீனா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு இளைஞர்களின் பங்குப்பணி முக்கிய காரணம். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்ட போதிலும் இந்தியா இதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ள இளைஞர்களின் பெருமுயற்சியும் இதற்கு ஒரு காரணம்.இவ்வாறு பிரதிபா பேசினார்.

No comments:

Post a Comment