Wednesday, February 1, 2012

முன்னாள் எல்.ரி.ரி.ஈ இயக்க உறுப்பினர்களுக்கு பொலிஸ் சேவையில் இணைய சந்தர்ப்பம்!

Wednesday,February,01,2012
இலங்கை::இலங்கை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் உறுப்பினர்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டிருந்தவர்கள் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காத பட்சத்தில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த நாட்டு பிரஜைகள் என்ற ரீதியில் எவ்வித பாகுபாடுமின்றி அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் கல்வித் தகைமை மற்றும் உடற்தகுதி எனபவற்றின் அடிப்படையில் முன்னாள் உறுப்பினர்கள் பொலிஸ் சேவைக்கு விண்ணபிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை வடபகுதியில் தகைமையுடைய தமிழ் பேசும் இளைஞர்கள் ஏற்கனவே பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment