Wednesday,February,01,2012
சென்னை: அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சட்டசபையிலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டார். சட்டசபையில் தே.மு.தி.க உறுப்பினர் சந்திரக்குமார் பால் மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து பேசிக் கொண்டிருந்த போது, தமிழக அமைச்சர்கள் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறுக்கிட்டு தகாத வார்த்தைகளினால் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவைக்காவலர்கள் வரவழைக்கப்பட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உட்பட தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
கைநீட்டி பேசிய அதிமுக உறுப்பினர்கள்
தேர்தல் தொடர்பான விவாதத்தின் போது அதிமுகவினர் மற்றும் விஜயகாந்த் இடையே காரசார விவாதம் நடைப்பெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் கைநீட்டி பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். மேலும் விஜயகாந்த் தகாத வார்த்தைகளால் அதிமுக உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.
விஜயகாந்த் பேச்சில் குறுக்கிட்ட ஜெ
பால் மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க உறுப்பினர் சந்திரக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா 'கட்டண உயர்வுகளுக்கு போதுமான விளக்கம் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது' என்று பதில் கூறினார். இதனையடுத்து, தேமுதிக உறுப்பினர் சந்திரக்குமார் 'இந்த கட்டண உயர்வு உள்ளாட்சித் தேர்தல் முன்பே அமல்படுத்தாதது ஏன்' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, 'சங்கரன்கோவில் இடைத்தேர்தல் விலையேற்றத்துக்கு பிறகு தான் வருகிறது'. அதற்கு விஜயகாந்த் 'இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறும் என்பது எல்லோருக்கும் தெரியும்' என்று கூறினார்.
விஜயகாந்த்துக்கு ஜெ.. விட்ட சவால்
விஜயகாந்தின் இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார். இவ்வாறு விவாதம் இறுதிக்கட்டத்தை எட்ட அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து தே.மு.தி.க உறுப்பினர்களையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து, சட்டசபையிலிருந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவைக்காவலரால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
விஜயகாந்த் ஆவேச பேச்சு
சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 'ஆளுநர் ஆட்சியின் கீழ் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைப்பெற்றால் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும்' என்று ஆவேசமாக கூறினார்.

No comments:
Post a Comment