Thursday, February 02, 2012
கோவை::சட்டசபைத் தேர்தல் முடிந்ததும், "கட்டாய' இடமாற்றத்துக்கு ஆளான, 27 போலீஸ் அதிகாரிகளை, மீண்டும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியமர்த்த வேண்டும் என, அவர்களது குடும்பத்தினர், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போயஸ் கார்டனில் இருந்து தூக்கியெறியப்பட்ட சசி கும்பலைச் சேர்ந்தவர்கள், இதுநாள் வரை நடத்திய அத்துமீறல், அடாவடிகள் பற்றி, தனிப்படை போலீசார் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
இவர்களில், அதிகாரத்தை கையிலெத்துக்கொண்டு, அ.தி.மு.க.,வினரையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் ஆட்டிப்படைத்து, பல கோடி ரூபாய் வசூலித்த புகாரில், ராவணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருக்கும் திவாகரனை, போலீஸ் தேடுகிறது.
இச்சூழலில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மாநகரில் பணியாற்றிய, 10 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஐந்து சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர்.
எவ்வளவோ கெஞ்சியும், குடும்பச் சூழல் பற்றி தெரிவித்தும், பெண்கள் என்றும் பாராமல், இவர்கள் திருச்சி, மதுரை, நெல்லை மாவட்டங்களுக்கு தூக்கியடிக்கப்பட்டனர்.
இரு மாதங்களுக்குப் பின், திருப்பூர் மாவட்ட அமைச்சரின் சொந்த ஊர்க்காரர்கள் என்பதால், மூவர் மீண்டு வந்தனர். மற்ற அனைவரும், இன்னமும் என்ன காரணத்துக்காக, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டோம் என்பது தெரியாமல், மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர்.
விசாரித்ததில், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின்போது, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நேர்மையாக, ஒரு தலைப்பட்சமின்றி செயல்பட்டனர். இதனால் கோபமடைந்த அ.தி.மு.க., தலைகள் சிலர், தேர்தல் வெற்றிக்குப் பின், "அ.தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள்' என, முத்திரை குத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சசிகலாவின் மைத்துனரிடம் (போலீஸ் டி.எஸ்.பி., ஆக பணியாற்றி ராஜினாமா செய்தவர்), இந்த அதிகாரிகள் பட்டியல் தரப்பட்டது. இவரது விருப்பப்படியே, பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., அலுவலகம், கட்டாய இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.இன்றைய சூழலில், போயஸ் கார்டனில் இருந்து மட்டுமன்றி, அ.தி.மு.க.,வில் இருந்தே, சசி கும்பல் வெளியேற்றப்பட்டு விட்டது.ஆனால், இக்கும்பலால் பழிவாங்கப்பட்ட அதிகாரிகள், இன்னமும் குடும்பத்தை விட்டு, வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். மீண்டும் தங்கள் குடும்பத்துடன் சேர வேண்டும். ஏற்கனவே பணியாற்றிய இடங்களில், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என விரும்புகின்றனர்.இவர்களின் குறையை, போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதல்வர் ஜெயலலிதா தீர்த்து வைக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

No comments:
Post a Comment