Monday, January 30, 2012

கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதும் வழங்காது-பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Monday, January 30, 2012
இலங்கை::கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று முன்வைத்துள்ள கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர்.

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக் கொண்டே அதனுடன் முரண்பட்டால், அது சந்திரகாந்தனுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment