Monday, January 30, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதனை தடுக்க முயற்சிக்கின்றது-டக்ளஸ் தேவனந்தா!

Monday, January 30, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பாராளுமன்றத் தெரிவுக்குழுஅமைப்பதனை தடுக்க முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்படுவதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்வு எட்டமுடியும் என ஜனாதிபதியிடம், அமைச்சர் தேவானந்தா யோசனை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிராகரித்து வருகின்றமை தொடர்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைவெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின்பிரதிநிதிகள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் ஆறு மாதகாலத்திற்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.

ஆறுமாத காலத்திற்குள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் முடிவுறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதிஏற்கனவே அறிவித்துள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு ஆதரவளித்தால், பிரச்சினைக்கு கூடியவிரைவில் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

13ம்திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதே தமது நிலைப்பாடு என தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

முதலில்13ம் திருத்தச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பானமுன்மொழிகளை கருத்திற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தவழிகளைப் பின்பற்றினால் குறுகிய காலத்திற்குள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை எட்டமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment