Sunday, January 29, 2012
திருச்சி::கச்சதீவை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் பிப்.19-ம் தேதி சமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சரத்குமார் தெரிவித்தார். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சரத்குமார் எம்எல்ஏ பேசியதாவது: மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணித்து வருகிறத. முல்லை பெரியாறு விஷயத்தில் மெத்தனம் காட்டி வருகிறது. தமிழகத்துக்கு வந்து சேரவேண்டிய தண்ணீர் வந்தே ஆகவேண்டும். இல்லையெனில் தமிழகத்தின் 7 கோடி மக்களும் முல்லை பெரியாறு அணை நோக்கி படையெடுக்க வேண்டி வரும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
கச்சத்தீவில் மீன் பிடிக்கும் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்வதும், சிறை பிடிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. முதல்வரின் தீர்மானத்துக்கு வலுசேர்க்கும் வகையில், அவரது ஒப்புதலோடு கச்சத்தீவை மீட்கக் கோரி வரும் பிப். 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். கச்சத்தீவை மீட்கும் வரையில் ஓயமாட்டோம். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

No comments:
Post a Comment