Sunday, January 29, 2012

பிரணாப் முகர்ஜி இன்று அமெரி்க்கா பயணம்!

Sunday, January 29, 2012
புதுடில்லி::இரண்டு நாள் பயணமாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா செல்கிறார். இந்திய பொருளாதார உள்கட்டமைப்புகளுக்காக இந்த நிதிஆண்டு 2012-2017-ல் ரூ. 1லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடுகள் குறித்து பேச இவர் அமெரி்க்கா செல்கிறார்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். சிகாகோ செல்லும் பிரணாப் அங்கு 500-க்கும் மேற்பட்ட முக்கிய தொழிலதுறை அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
அமெரி்க்கா செல்லும் பிரணாப் சிகாகோவில் ,விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய மையம், சென்று பின்னர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசுகிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா செனறிருந்த பிரணாப், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பினை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment