Monday, January 30, 2012

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

Monday, January 30, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு அடுத்த மாதம் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தாக்கல் செய்திருந்த வழக்கொன்று இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தினர் தெரிவை இரத்து செய்யுமாறு மைத்திர குணரத்ன வழக்கில் கோரியுள்ளார்

அத்துடன் நடைபெற்ற நிர்வாகத் தெரிவுக்கான வாக்குச் சீட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்ரமசிங்கவின் கட்சித் தலைமைப் பொறுப்பை இடைநிறுத்தி வைக்குமாறும் மாகாண சபை உறுப்பினர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment