Saturday, January 28, 2012

பருத்தித்துறையைச் சேர்ந்த மாணவி இதயநாதர் மேரி டிலக்சனாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

Saturday, January 28, 2012
இலங்கை::பருத்தித்துறையைச் சேர்ந்த மாணவி இதயநாதர் மேரி டிலக்சனாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மோப்ப நாய்களைப் பயன்படுத்தியே நேற்று முன்தினம் இப்படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் மாலை மாணவியின் சடலம் பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் அல்வாய் வடக்கு, சக்கோட்டை பழைய தேவாலயத்தின் பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அல்வாய் வடக்கு சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள ஆட்கள் இல்லாத வீடொன்றில், சக்கோட்டை றோ.க.த.க.வில் கல்வி பயிலும் 17 வயதுடைய இதயநாதர் மேரி டிலக்சனா அண்மையில் வாய் மற்றும் மூக்கில் பிளாஸ்டரால் ஒட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment