Friday, December 30, 2011

வலுவிழந்த கிராமங்கள் அபிவிருதி-கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்!

Friday, December,30, 2011
இலங்கை::வலுவிழந்த கிராமங்களை அபிவிருத்தி செய்தல்” எனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் விசேட கிராமிய அபிவிருத்திட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டிற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களிலுமிருந்து தலா இரண்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையிலே திருகோணமலையில் மொறவௌ பிரதேச செயலகப்பிரிவில் ஒரு கிராமமும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் நீனாக் கேணி மற்றும் நல்லூர் கிராமம் என்பன உள்ளடக்கப்படட்டுள்ன.

நீனாக் கேணி, நல்லூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பல்வேறு அனர்த்தங்களுக்கு நேரடியாக முகம் கொடுக்கின்ற கிராமங்கள் ஆகும். தற்போது மீளக் குடியமாத்தப்பட்டு தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்ற மேற்படி கிராத்தினை தேர்ந்தெடுத்து அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வாழ்வாதார வசதிகள், தொழில் வாய்ப்புக்கள், கல்வி, போக்குவரத்து, சுகாதாரவசதிகள், மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்யப்படவுள்ளது. அத்தோடு குறித்த இருகிராமங்களுளிலும் 80க்கு மேற்பட்ட விதவைகள் எந்தவொரு வாழ்வாதர மேம்பாடும் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கான விசேட வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சுயதொழில்களுக்கு உதவிகள் என குறித்த கிராமங்களுக்கான முக்கிய வீதிகள் உள்ளடங்கலாக கிராமத்திற்கான அனைத்து அடிக்கட்டுமான வசதிகளோடு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான உதவித்திட்டங்களும் முன் மொழியப்பட்டன.

நேற்று (29.12.2011) நீனாக்கேணி மலைமுந்தல் வித்தியாலயத்தின் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மேற்குறித்த திட்டத்திற்கான செயற்றிட்ட முன்மொழிவுக் கூட்டம் இடம் பெற்றது.

இதில் கிழக்கு மதாகாண முதலமச்சரின் செயலாளர் கலாநிதி எஸ் அமலநாதன், கிராமிய அபிவிருதி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளார் அருந்தவராஜா, முதலமைச்சரின் திட்டப்பணிப்பாளர் கௌரிதரன், முதலமைச்சரின் உத்தியோகஸ்த்தர்கள், வெருகல் பிரதேச செயலாளர், மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், ஊர் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

இவர்களுக்காக இன்று முதலமைச்சரினால் நன்னீர் மீன்பிடிக்கான தோணிகள் மற்றும் வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment