Friday, December 30, 2011

தானே புயல் : சென்னையில் 50 விமானங்கள் தாமதம்!

Friday, December,30, 2011
சென்னை: தானே புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையங்களில் விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், உள்ளிட்ட நக ரங்களுக்கு செல்லும் விமானங்கள் 3 முதல் 5 மணி வரைதாமதமாக வந்து செல்கிறது.

இதே போல் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும் தாமதமாக வருகிறது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 மணி நேரம் தாமதமாக இன்று காலை 8.40 மணிக்கு வந்தது. பின்னர் 9.40 மணிக்கு மீண்டும் மலேசியா புறப்பட்டு சென்றது.

இதே போல் அதிகாலை 4.30 மணிக்கு வரவேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம் காலை 7.10 மணிக்கு வந்தது. காலை 6.15 மணிக்கு வரவேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பகல் 12.30 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. சார்ஜாவில் இருந்து வரவேண்டிய 5 விமானங்களும் தாமதமாக வந்தன. சூறைக்காற்று காரணமாக நேற்று மதியம் முதல் இன்று பிற்பகல் வரை 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து செல்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment