Tuesday, November 29, 2011

நாடு திரும்பியதும் துமிந்த கைது செய்யப்படுவார்: குற்றப்புலனாய்வினர்!

Tuesday, November 29, 2011
பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பாரளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் நாடு திரும்பியதும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப்புலனாய்வினர் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேம சந்திர கொலை வழக்கின் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு நீதமன்றம் விடுத்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் இன்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வைத்திய அறிக்கையின்படி அவர் கைது செய்யப்படும் நிலையில் இருக்கவில்லை என அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை காண்பித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

No comments:

Post a Comment