Tuesday, November 29, 2011

பத்தொன்பது மீன்பிடி படகுகளை காணவில்லை: லால்.டி.சில்வா!

Tuesday, November 29, 2011
கடந்த சில தினங்களாக நாட்டின் தென்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 19 மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

அத்துடன் 11 மீனவர்களும் காணாமல் போயுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் லால்.டி.சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போன மீன்பிடி படகுகள் அழிவடைந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் காணமல்போயுள்ள மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக உதவிப் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருந்த பல படகுகளும் காற்றினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment