Saturday, October 1, 2011

உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது-ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே!

Saturday, October 01, 2011
உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா, இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து, இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு அரசியல் நலன்களை அடைவதற்காக இவ்வாறு சர்வதேச ரீதியில் பிரிதொரு நாட்டின் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதனைப் பயன்படுத்தி புலி ஆதரவு அமைப்புக்கள் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு காட்டி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளளனர்.

இலங்கையை விமர்சனம் செய்யும் கனடா, சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment