Saturday, October 01, 2011
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை திரட்டும் நடவடிக்கையானது பொருத்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவோருக்கு வடக்கு கிழக்கில் உரித்தான காணிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தகவல்களை திரட்டும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் N;காரியுள்ளார். இந்தத் தகவல் திரட்டும் நடவடிக்கையானது நீதியாக அமையாது என மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக உணர்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் தமிழ் மக்களை வேதனைப்படவும், அதிருப்தியடையவும் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment