Saturday, October 01, 2011
இலங்கையின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிவ்யோர்க்கில் இடம் பெற்ற 66 வது ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்து கொண்ட போது இலங்கை ஜனாதிபதிக்கு இது குறித்து தெளிவுப்படுத்தியதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதியுடன் இடம் பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய ஊடகங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தகவல் வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக சில சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளில் இந்தியாவின் அரசியல் கட்சிகள் சில தமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு அந்த கட்சிகள் வலியுறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக இலங்கையின் உள்ளக பிரச்சினைகளுக்கு இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளாது எனவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment