Saturday, October 01, 2011
யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்!.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்திய தரப்பினர் தொடர்ந்தும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிரான முனைப்புக்கள் முறியடிக்கப்பட்ட போதிலும், அச்சுறுத்தல்கள் முடிவடைந்து விட்டதாகக் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் தொடர்பாக எதிர்காலத்தில் எழக்கூடிய அழுத்தங்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மான் அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பான சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment