Thursday,September,01,2011
மேற்குலக சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் மத்தியில் அவசரகாலச் சட்டத்தை நீக்கியது பொருத்தமான நடவடிக்கை அல்ல என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எல்லே குணவங்ச தேரர், கலாநிதி குணதாச அமரசசேகர ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலக சக்திகள் இலங்கைக்கு எதிராக லிபியாவில் மேற்கொண்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட முயற்சித்து வருவதாக இவர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு முன்னர் சூடானில் மேற்கொண்டதை போன்று இலங்கையில் செய்ய மேற்குலக சக்திகள் முயற்சித்தன.
அதிகார பரவலாக்கல் யோசனை ஊடாக நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு சென்று, அதன் பின்னர், ஏற்படும் நிலைமையை கட்டுப்படுத்த இராணுவ ரீதியிலான தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலக நாடுகள முயற்சித்து வருகின்றன. அவசரகாலச் சட்டத்தை நீக்கிய பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு சில சக்திகள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment