Thursday, September 29, 2011

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பும் அகதிகளுக்கு அங்கு பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் எதனையும் தரமுடியாது-ஐ.ஓ.எம். அமைப்பு!

Thursday,September, 29, 2011
பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பும் அகதிகளுக்கு அங்கு பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் எதனையும் தரமுடியாது என கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான ஐ.ஓ.எம். அமைப்பு. இந்த அமைப்பே அகதிகளைத் திருப்பி அனுப்பும் போது அவர்களுக்கான வழிபயண ஏற்பாட்டை செய்கிறது.பிரிட்டனில் நேற்று இறுதி நேரத்தில் கூட நாடு கடத்தப்படுவோரின் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.ஓ.எம் என்றசர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தினர், எனினும் அந்த அமைப்பு, நாடுகடத்தப்படுவோரின் பாதுகாப்பு குறித்து தம்மால் உறுதிப்பாட்டை தெரிவிக்கமுடியாது என்றுதெரிவித்துவிட்டது.

50 இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக விமானத்தினை பிரித்தானிய எல்லை பாதுகாப்புமுகவரமைப்பின் அதிகாரிகள் தயார் படுத்திய போது பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இலங்கைத் தமிழர்கள் நாடுதிருப்பப்படின் 50 இலங்கைத் தமிழர்களும் கொடுமைக்கு உள்ளாகலாம் என எச்சரித்திருந்தனர்.

எனினும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் தலைவர் கீத் பெஸ்ட், நாடு கடத்தப்படுவோர் தொடர்பில்,பிரித்தானிய எல்லைப்பாதுகாப்பு சபையின் தலைவர் ரொப் வைட்மானுடன் தொடர்பு கொண்டு, நாடு கடத்தப்படுவோரின்தொடர்பு தகவல்களை பெற்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் அவர்களின் பாதுகாப்பு குறித்துகேட்டறிய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேவேளை நாடு கடத்தப்படும் தமிழர்கள் நிச்சயமாக இலங்கையில் பல இன்னல்களுக்குமுகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment