Thursday,September,01,2011
வடக்கில் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு உதவுமாறு தமிழ்த் தேசியக் (புலிகளின்)கூட்டமைப்பு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது!
வடக்கில் நிறுவப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் வடக்கு கிழக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் (புலிகளின்)கூட்டமைப்பு இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகளை எட்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பத்து சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் 10ஆவது சுற்று பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளின் காரணமாக பேச்சு தடைப்பட்டிருப்பதாகவும் அதே நேரம் தமது கோரிக்கைகளுக்கான பதிலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள் செயற்பாடுகள் மற்றும் வரி நிதி தொடர்பான அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்களை முன்வைத்து அதற்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டுமென்றும் இல்லையேல் பேச்சுக்களை தொடர்வதில் அர்த்தம் இல்லை என்ற வகையிலும் அரசாங்கத்திற்கு திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் காங்கிரஸ் கட்சியினால் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட எட்டு தமிழ்க் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களின் ஒரு பகுதியாகவே மேற்படி மனு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பிரதமர் மன்மோகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறும் அதேநேரம், வடக்கு கிழக்கிலுள்ள அதி உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு பொதுமக்களை மீள்குடியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்ததை டில்லி மாநாட்டின் போது முக்கிய விடயமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த விடயங்களே பிரதமர் மன்மோகன் சிங்குக்கான மனுவிலும் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

No comments:
Post a Comment