அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து TNA நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியல் தலைவர்களிடம் விளக்குவார்கள்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியல் தலைமைத்துவ பிரச்சினை எழுந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது!
Friday, August 19, 2011
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்திய அரசியல் தலைவர்களிடம் விளக்குவார்கள் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள மனித உரிமை சார் கருத்தரங்கொன்றில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன.
இந்த விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியல் தலைமைத்துவ பிரச்சினை எழுந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தலைமைத்துவப் பொறுப்பினை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
உடல் நலக் குறைவு காரணமாக கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதற்கு ஆர்.சம்பந்தன் தயாராகி வருவதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில மொழியறிவு உடைய ஒருவரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டுமென்ற கருத்து நிலவி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சுமந்திரன், சவரணபவன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தலைமைத்துவப் பொறுப்பிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் கட்சித் தலைமைப் பொறுப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் அறிவிக்கப்படும் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment